கேரளாவின் கண்ணூரில் திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஸ்ரீகண்டாபுரத்தைச் சேர்ந்த சி.பி.போக்கர் மற்றும் கே.வி.ரமீசா தம்பதியின் மகள் பாத்திமத் ரானா (23). இவருடைய திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்தது. இந்த நிலையில், நேற்று திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனே அவர் கண்ணூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.