தமிழகத்தில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சம்பா சாகுபடிக்கு ஜனவரி மாதம் வரை தண்ணீர் தேவைப்படும் நிலையில், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறாததால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.