கொசுக்கள் அண்டாது!

1985பார்த்தது
கொசுக்கள் அண்டாது!
ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். 250 மில்லி வேப்பஎண்ணெயையும் வாங்கி கொள்ளுங்கள். இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். மாலை ஆறு மணியளவில் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அகல் விளக்கில் இந்த எண்ணெய்யை ஊற்றி பஞ்சுத்திரி கொண்டு தீபம் ஏற்றுங்கள். கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது. இது உண்மை. இது உடலுக்கு மிகவும் உகந்தது. கொசுவிரட்டி சுருள்கள், மருந்துகள் உடலுக்கு கேடு விளைவிப்பவை. இந்த எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இப்போது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே! அவர்களின் செயல் அனைத்தையும் மூட நம்பிக்கை என்று எண்ணி கைவிட்டதின் விளைவு இன்று டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் மக்களை பாதிக்கின்றன.

தொடர்புடைய செய்தி