செவிலியர்கள் கைது.. அதிகார துஷ்பிரயோகம்: டிடிவி தினகரன்

2188பார்த்தது
செவிலியர்கள் கைது.. அதிகார துஷ்பிரயோகம்: டிடிவி தினகரன்
பேச்சுவார்த்தை நடத்துவோம் என அழைத்து சென்று செவிலியர்களை கைது செய்தது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது அராஜக போக்கைக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சினிமாவில் ஹீரோவாக நடித்த CM விஜய் நிஜத்தில் தான் ஒரு வில்லன் என்பதை நிரூபிக்க முற்படுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி