நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 486 ரன்கள் குவித்துள்ளது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில்,
இந்தியா 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கே.எல்.ராகுல் 136 ரன்களும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களும் எடுத்தனர். சதத்தை நெருங்கிய கேப்டன் சுப்மன் கில் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 55 ரன்களுடன் களத்தில் இருந்தார்.