ஊட்டி மலை ரயில் தினம்: கேக் வெட்டி கொண்டாட்டம்

8பார்த்தது
நீலகிரி மலை ரயிலின் 118வது தினம் ஊட்டி ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. 1898-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முதன்முதலில் இயக்கப்பட்ட இந்த ரயில், 1908-ல் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது. 2005-ல் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த ரயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணிக்கின்றனர். கொண்டாட்டத்தின்போது ரயில்வே அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி மகிழ்ந்தனர். மலை ரயிலின் சிறப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது. 

நன்றி: SS News

தொடர்புடைய செய்தி