ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து

3பார்த்தது
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இன்றும் நாளையும் ஊட்டி மலை ரயில் சேவையை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கனமழையால் சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மறு உத்தரவு வரும் வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி