காணாமல்போனவர்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

9பார்த்தது
காணாமல்போனவர்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழ்நாட்டில் காணாமல்போனவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாட்டில் காணாமல் போனவர்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யை உத்தரவிட்டது. மேலும், காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதா? என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

தொடர்புடைய செய்தி