வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், ஒடிசாவின் தெற்கு நோக்கி நகர்ந்ததால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, 2,245 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று புயல் ஆந்திராவில் கரையை கடந்த சூழலில், ஒடிசாவில் புயல் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், அம்மாநில மருத்துவமனைகளில் 931 குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெற்றது. புயல் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் புயல், மழையைக் குறிக்கும் வகையில் ‘அர்னாப்’, ‘வர்ஷா’ போன்ற பெயர்களைச் சூட்டியுள்ளனர்.