
திருச்சி அருகே கார், லாரி மோதி விபத்து ஒருவர் பலி.. 6 பேர் காயம்
திருச்சி திருவெறும்பூர் அருகே பூனாம்பாளையம் பகுதியில் காரில் சென்ற உறவினர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முத்து மற்றும் சண்முகம் இருவரும் உறவினர்கள், தங்கள் குடும்பத்தினருடன் துறையூர் பச்சைமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். பூனாம்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியதில், சண்முகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரில் பயணித்த மேலும் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.









