சிவகங்கை காரைக்குடி பேருந்து பணிமனையில் ஒட்டுநர், நடத்துனராக பணியாற்றி வரும் முரளிக்கு நிரந்தர பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் பணிமனையில் பணியில் சேர்ந்த நாள் கணக்கிட்டு, பணிமூப்பு வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நேற்று இது தொடர்பாக ஒருவழி நிரந்தர பணயிட மாற்றம் கோரி விண்ணப்பித்த நிலையில், முதலமைச்சர்
விஜய் உத்தரவின் பேரில் ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.