திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (அக்.17) மாலை திடீரென கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையின் தாக்கத்தை தாங்க முடியாமல் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழும் நேரத்தில் அங்கு வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் அருகில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.