மோசமான வானிலையால் வானில் வட்டமடித்த விமானம்!

1806பார்த்தது
மோசமான வானிலையால் வானில் வட்டமடித்த விமானம்!
பெங்களூருவிலிருந்து 159 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் நிலவிய மோசமான வானிலை காரணமாகத் தரையிறங்க முடியாமல் காஞ்சிபுரம் வாலாஜாபாத் வான்பரப்பில் 10 நிமிடங்களுக்கும் மேலாக வட்டமடித்தது. பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது; இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி