சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில், ரஷ்யாவின் விண்வெளி வீரர் யூரி காகரின் சிலையை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் மற்றும் ரஷ்ய துணைத் தூதர் வலேரி கோட்சேவ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடிய வி.நாராயணன், விண்வெளி அறிவியல் பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இந்திய விண்வெளி வளர்ச்சிக்கு ரஷ்யாவின் பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்த அவர், ககன்யான் திட்டம் மற்றும் இஸ்ரோவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தார்.