வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாமக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய பூவரசனை சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்றபோது தப்பியோட முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பூவரசன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஞானவேல் என்பவர் நேற்று உயிரிழந்தார். கொலைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை எடுக்க சென்ற போது பூவரசன் தப்பியோட முயற்சித்தார். அப்போது போலீசார் அவரது முழங்காலில் சுட்டுப் பிடித்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.