போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்தது காவல்துறை

2934பார்த்தது
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களைப் போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பணி நிரந்தரம் செய்தல், உரிய பணிப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி