தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு தொடர்பாக ரூ.400 கோடிக்கும் மேலான பண மோசடி வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முத்துக்குமாரின் வங்கிக் கணக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கியுள்ளனர். இதுவரை சுமார் 170 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முத்துக்குமாரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4 கோடி வரை பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ள போலிஸார், அவரின் மொத்த பரிவர்த்தனைகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.