திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் ஒரு முறை தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, நாளை அங்கு தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மதுரை ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் அருகே காவல்துறையினர் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.