திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மீண்டும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (நவ.19) மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், சரவணன் ஆகியோரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளிடம் எவ்வளவு பணம் வசூலித்தனர்?, அந்தப் பணம் எங்கு சென்றது? என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ்18