ஆபாச பேச்சு.. திமுக எம்எல்ஏவிடம் போலீசார் விசாரணை

0பார்த்தது
திருவையாறு திமுக எம்எல்ஏவிடம் காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திருமண விழாவில், திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் கலந்துகொண்டார். அப்போது அவர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா ஆகியோரை தரக்குறைவாகவும், மரியாதைக்குறைவாகவும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக, துரை சந்திரசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.  நன்றி: News18

தொடர்புடைய செய்தி