திமக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, தனது வழக்கறிஞர் பணியிலிருந்து
அரசியல் பயணத்தைத் தொடங்கி, பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1996 முதல் பல்வேறு காலகட்டங்களில் ஊரக வளர்ச்சி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மாநில சுயாட்சி, சமூக நீதி மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் குறித்த விமர்சனங்களில் இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.