பொங்கல் திருநாளை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல திட்டமிடும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவ., 13) தொடங்கியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். காலை 8 மணி முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் டிக்கெட் கவுன்டர்கள் மூலம் முன்பதிவு தொடங்கியுள்ளது. பண்டிகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பயணங்களுக்கான முன்பதிவு தேதிகள் இதன்படி வரிசையாகத் தொடங்கவுள்ளது.