ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ஹாரர் காமெடி படம் ‘காஞ்சனா 4’. 2007ல் தொடங்கிய 'முனி' படத்தை தொடர்ந்து 'காஞ்சனா 1, 2, 3' ஆகிய பாகங்களைப் போல ஹாரர் காமெடி படமாக இது உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்புதுப்படத்தில் பூஜா ஹெக்டே, நோரா ஃபதேஹி ஆகிய இருவரும் நாயகிகளாக இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ், கோல்ட்மைன், ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.