திபெத்தின் வடக்குப் பகுதியான நாக்கு மாகாணத்தில் இன்று இரவு 7 ரிக்டர் அளவிலான பயங்கர
நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, தரைப்பகுதியில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 300க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகிப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.