காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி ஊராட்சியில் நடைபெற்ற பாலர் சபை கூட்டத்திற்கு அதன் தலைவர் தாருனேஷ் தலைமை தாங்கினார். இதில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி, சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் சமூக ஊடகம் உள்ளிட்ட பிரிவுகளுக்குத் தனித்தனியாகப் புதிய தலைவர்களை நியமிப்பது என இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.