டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக
பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் இன்று (செப்.5) பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது, மெட்ரோ ரயிலில் தன்னுடன் பயணித்த பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். வணிகம், பொருளாதாரம் மற்றும் மேலாண்மை துறைகளில் சிறந்து விளங்கும் இக்கல்லூரியின் 100-வது ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய பிரதமரின் இந்த எளிமையான மெட்ரோ பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நன்றி:News18