தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், பணியில் அலட்சியமாக இருந்த சிறைக்காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தப்பியோடிய கைதிகளை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் பல மடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.