சென்னை மாநகரப்
போக்குவரத்து கழகத்தின் சேவையை நவீனப்படுத்தும் வகையில் புதிதாக 1,000 ஏசி வசதி கொண்ட மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய CM
விஜய் உத்தரவிட்டுள்ளார். இப்புதிய மின்சார பேருந்துகளுக்கான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் உட்கட்டமைப்பு வசதிகளை பணிமனைகளில் ஏற்படுத்துவதற்காக ரூ.500 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. பொதுமக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், நகர பகுதியில் சுற்றுச்சூழல் மாசை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.