
காரைக்கால்: குழந்தை விற்பனை.. 16 பேர் கைது
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே, 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிறந்து 30 நாட்களே ஆன, பெண் குழந்தையை சட்டவிரோதமாக விற்ற வழக்கில், கைதானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பெண் ஏஜென்டை தேடி வருவதாக மாவட்ட எஸ்.எஸ்.பி லட்சுமி சௌஜன்யா தெரிவித்துள்ளார்.







