
விவசாயிகளுக்கு ரூ.5,000 கோடி ஊரகத் தொழில் கடன்: அமைச்சர் காந்திராஜன்!
விவசாயிகளின் வருவாயை உயர்த்த 9% வட்டி விகிதத்தில் ரூ.5,000 கோடி ஊரகத் தொழில் கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை சங்கங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் தரப்படும். இக்கடனை 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 2026-27 நிதியாண்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் பெண் மற்றும் குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.




























