ராகுல் காந்தி குடியுரிமை தொடர்பான வழக்கு தள்ளுபடி

2347பார்த்தது
ராகுல் காந்தி குடியுரிமை தொடர்பான வழக்கு தள்ளுபடி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டின் குடியுரிமையை கொண்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் இந்த குற்றச்சாட்டிற்கு எந்தவொரு ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர். மேலும், இதேபோன்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த 2015, 2019-ம் ஆண்டுகளிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி