ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டின் 4 காலிறுதி ஆட்டங்களும் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து வியாழக்கிழமை நடக்கும் அரையிறுதியில்
இந்தியா - இலங்கை மற்றும்
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ஒருவேளை இறுதிப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டால், இறுதிக்கு முன்னேறும் இரு அணிகளுக்கும் தங்கப் பதக்கம் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.