அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

15பார்த்தது
அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், நாமக்கல், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி