கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனிடையே இன்று அதிகாலையில் ஆந்திராவில் ‘முரசு’ புயல் கரையைக் கடந்தது.