திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.