தென்மேற்கு வங்கக்கடலில் நாளை (நவம்பர் 13) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதனிடையே ராமநாதபுரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.