
மருத்துவமனைகள் சிகிச்சைக் கட்டணங்களைக் காட்சிப்படுத்த அரசு உத்தரவு!
தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை, பரிசோதனை மற்றும் படுக்கைக் கட்டண விவரங்களை மக்கள் எளிதில் பார்க்கும் வகையில் வரவேற்பறையில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியில் இவை இடம்பெற வேண்டும். நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய, இதைத் தீவிரமாகக் கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.




























