ஓமன் கடற்கரையில் தென்பட்ட அரிய வகை பிங்க் டால்பின்கள்

1பார்த்தது
ஓமன் கடற்கரையில் தென்பட்ட அரிய வகை பிங்க் டால்பின்கள்
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள கந்தாப் கடற்கரை பகுதியில் மிகவும் அரிய வகை பிங்க் நிற டால்பின்கள் கண்கவர் காட்சியாக தென்பட்டுள்ளன. வழமையான சாம்பல் நிற டால்பின்களுடன் இணைந்து இந்த கவர்ச்சிகரமான பிங்க் டால்பின்கள் கடலில் நீந்தி செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயற்கை விரும்பிகளையும் வனவிலங்கு ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த அபூர்வ காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி