ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

2944பார்த்தது
ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு நிதி தேவைகளுக்காக பல்வேறு தவணைக்கால பிணைய பத்திரங்களை மறுவெளியீடு செய்து மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஏலமானது இ-குபேர் மின்னணு தளம் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்.1, 2026 அன்று நடைபெறவுள்ளது. முதலீட்டாளர்கள் அன்றைய தினம் தங்களின் போட்டி மற்றும் போட்டியற்ற ஏலக் கேட்புகளை மின்னணு முறையில் சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி