சோலைராஜ் தர்மராஜ்-க்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

18பார்த்தது
சோலைராஜ் தர்மராஜ்-க்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை
ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆண்கள் நீளம் தாண்டுதல் T64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ்-க்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், திறமையும், உறுதியும் இருந்தால் எத்தகைய சவால்களையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு சோலைராஜின் இம்மகத்தான வெற்றி சான்றாகத் திகழ்வதோடு, விளையாட்டு வீரர்களுக்குப் புதிய நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி