அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 பைசா சரிவு

2290பார்த்தது
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 பைசா சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆரம்ப வர்த்தகத்தில் 3 பைசா சரிந்தது. இதையடுத்து ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.95.97 ஆக உயர்ந்தது. முந்தைய வர்த்தக நாளில் ரூபாய் மதிப்பு ரூ.95.94-ஆக இருந்த நிலையில், இன்று சற்று சரிவுடன் வர்த்தகமானது. வெளிநாட்டு முதலீடுகள், சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலரின் வலிமை உள்ளிட்ட காரணிகள் ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முதலீட்டாளர்கள் சந்தையின் அடுத்தகட்ட நகர்வை கவனித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி