சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தெற்கு காடு பகுதியில் வசிக்கும் முனுசாமி என்பவரின் தகரக் கூரை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டிலிருந்து புகை வெளியேறியதைக் கண்ட முனுசாமி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து துரித முயற்சியால் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.