
சேலத்தில் திமுக மாணவர் அணியினர் போராட்டம்
சேலத்தில் திமுக மாணவரணி சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10 மணிக்கு மாணவர் அணி நிர்வாகிகள் திரண்டபோது, மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, திமுக மாணவர் அணியினர் போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தியும், போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரிப்பை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட முயன்ற திமுகவினரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
















