
சேலம்: திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதே அவர்கள் நோக்கம்.. இபிஎஸ்
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், செங்கோட்டையன் நீக்கப்பட்டது நான் எடுத்த நடவடிக்கை அல்ல; கட்சி மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் சேர்ந்து எடுத்த முடிவு. உண்மைக்கு மாறான செய்திகளை ஊடகத்தில் கூறி வருகிறார். இயக்கத்திற்கோ, தொண்டர்களுக்கோ துரோகம் விளைவித்தால் கட்சி பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதே அவர்கள் நோக்கம் என்றார்.
















