சாம் டால்ரிம்பிளுக்கு 2026-ம் ஆண்டுக்கான NIF புத்தக விருது

23பார்த்தது
சாம் டால்ரிம்பிளுக்கு 2026-ம் ஆண்டுக்கான NIF புத்தக விருது
2026-ம் ஆண்டுக்கான கமலாதேவி சட்டோபாத்யாய் நியூ இந்தியா ஃபவுண்டேஷன் புத்தக விருது, வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சாம் டால்ரிம்பிளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய முதல் நூலான ‘Shattered Lands: Five Partitions and the Making of Modern Asia’ என்ற புத்தகத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு சிதைந்தபோது உருவான ஐந்து பிரிவுகளையும், பர்மா முதல் ஏடன் வரையிலான வரலாற்றையும் இந்நூல் ஆராய்கிறது. விருதுடன் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி