ஏமன் நாட்டில் ஹவுதி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் மற்றும் தலைநகர் சனா பகுதிகளில் சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததாக ஹவுதி அமைப்பின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹவுதி அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது