SBI ஏடிஎம்-களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் ரத்து

2913பார்த்தது
SBI ஏடிஎம்-களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் ரத்து
வங்கி வேலைநிறுத்தம் வரும் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக SBI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 3 நாட்களில் SBI ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு வழக்கமாக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. பொதுவாக, ஒரு மாதத்தில் 5 இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ஆனால், வேலைநிறுத்த நாட்களில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி