தமிழகத்தில் வெள்ளி விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.230-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த அக்., 12ஆம் தேதி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 15ஆம் தேதி ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்கப்பட்டு வந்தது. இதனிடையே தற்போது 6 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் ரூ.10 குறைந்து ரூ.230 ஆக சரிந்துள்ளது. மத்திய கிழக்கு
போர் எதிரொலியால் தங்கம், வெள்ளி மீதான முதலீடு குறைந்து விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.