தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்குகளில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு (SIT) தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய நபர்கள் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றங்களை மறைக்க முயன்று வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிய பிரகாஷ் என்பவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, அவரை
இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறப்பு புலனாய்வு குழு விளக்கமளித்துள்ளது.