
புரட்டாசி 2-வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையான இன்று (செப்.26) தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருக்கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடுகளும் கோலாகலமாக நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், தி.நகர் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட 108 திவ்ய தேசங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.



























